எமது அடைவுகள்
2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்ட "Certificate of Compliance" விருதினை எமது சபை தனதாக்கிக்கொண்டது.
2024
உள்ளுராட்சி மன்றங்களிடையே நடாத்தப்பட்ட 2023ம் ஆண்டிற்கான Pecft 2+ மதிப்பீட்டில் எமது சபையானது தேசியரீதியான போட்டியில் 3ம் இடத்தினை பெற்றுள்ளது.
எமது சபை கூமாங்குள பொது நூலகம் 2024ம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தி, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் விருது பெற்றுள்ளது.
2023
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகவங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட LDSP (Local Government Support Project) செயற்றிட்டத்தின் உரிய காலத்தில் வழங்கப்பட்ட வேலைகளை பூர்த்திசெய்த எமது சபைக்கு சான்றிதழ் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.
எமது சபையானது 2023ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ்மட்ட தரக்கணிப்பு பெற்றமைக்கான (CERTIFICATE OF COMPLIANCE) சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற கணக்கு குழுவினால் 2019 ஆம் ஆண்டுக்கான திருப்திகரமான செயற்றிறனை வெளிப்படுத்தியமைக்காக எமது சபைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.









