
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் 2024ம் ஆண்டு விருதுக்கான சிறந்த நூலகங்களில் ஒன்றாக எமது சபையின் கூமாங்குளம் பொதுநூலகம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கௌரவம் 20.11.2025 தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கேட்பார் கூடத்தில் வழங்கப்பட்டன.
2024ம் ஆண்களுக்கான விருதினை பெற்றுக்கொண்ட எமது நூலகத்தின் நூலகர் உட்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் அலுவலக மட்டத்தில் ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய சபையின் செயலாளர் உட்பட்ட சகல உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக..
