ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 24.02.2026

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான ஆதனவரி நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை மதீனநகரில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நடமாடும் சேவையிலும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் போட்டி- 25.02.2026

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு 25.02.2026ம் திகதி கணேசபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் (மென்பந்து கிரிக்கெட்) போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்கள், சந்திகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்பாக பொதுவாக இரவு மற்றும் சனநடமாற்றமற்ற வேளைகளில் திண்மக் கழிவுகளை (குப்பைகளை) கொண்டுவந்து வீசிச்செல்வதனால் பாரிய சூழல் மாசடைவுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Continue reading “சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை”

கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்…

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 19.02.2026 – 2ம் நாள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 2ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை அண்ணாநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இரு தினங்களாக நடைபெற்ற நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்
முதன்முறையாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 1ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று புதன்கிழமை (18.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறுகின்றது.
மேலும் நாளைய தினமும் (19.02.2026) அண்ணாநகர் பகுதியிலும் 2ம் நாளாக ஆதனவரி நடமாடும் சேவையானது காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறும்.
குறித்த நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரி படிவங்களை ( K Form) பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஆதனவரியை இம்மாதம் (மாசி மாதம்) 28 ஆம் திகதிக்கு முன் செலுத்துபவர்கள் தமது வரியில் 05% இனை கழிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .
எனவே ஆதன வரி செலுத்தும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஆதனங்களுக்கான வரியினை இன்றைய தினம் நடைபெறவுள்ள நடமாடும்ட சேவையில் நிலுவையின்றி செலுத்தி தாங்களும் பயனடைவதுடன், தங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்..
தவிசாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 16.12.2025

 

 

 

 

 

 

 

 

16.12.2025ம் திகதி இடம்பெற்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 7வது சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களின் பார்வைக்காக..

சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில் கற்கும் சிறார்கள் வர்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணைப்பாடவிதானத்துடன் கூடிய கற்றல் நடவடிக்கையாக “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு” நடைபெற்றது.

Continue reading “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி”

எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது நிதி வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்காக இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் இலங்கை அரச நிதி கணக்கறிஞர்கள் சங்கத்தினால் BMICH இல் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்ட “Certificate of Compliance” விருதினை தனதாக்கிக்கொண்டது.

Continue reading “எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024″

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளிஎமது பிரதேச சபையின் முன்பள்ளியான Continue reading “சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி”

பொங்கல் விழா மற்றும் “எனது 1வது பாடசாலை நாள்” நிகழ்வு – ஓமந்தை முன்பள்ளி

எமது பிரதேச சபையின் முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில்… பெற்றோர், நலன்விரும்பிகள், ஆசிரியர் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருமித்த பங்கேற்புடன் 2026ம் ஆண்டுக்கான பொங்கல் விழா
மற்றும்
மலர்ந்துள்ள புதிய வருடத்தில் புதிதாக இணைந்துள்ள புதுமுக மழலைகள் உள்ளடங்கலாக அனைத்து மாணவர்களையும் புதிய கல்வியாண்டில் வரவேற்கும் “எனது 1வது பாடசாலை நாள்” (My First Day School” நிகழ்வும் ஓமந்தை முன்பள்ளியில் 21.01.2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது..