முன்பள்ளி சிறார்களின் களப்பயணம் 19.06.2026

எமது பிரதேச சபை முன்பள்ளியின் சிறார்கள் சுற்றாடலிருந்து தாமாக அறிந்து கொள்ளும் திறனை மேம்படுத்தகுளமும் குளம் சார்ந்த பிரதேசதத்தினை நோக்கியதான களப்பயணமானது பெற்றோரின் ஒத்துழைப்புடன் 19.06.2026 அன்றைய தினம் சிறப்பாகநடைபெற்றது.    

மரகத மஞ்சள் நிறக்கூட்டத்தின் மஞ்சள் நாள் கொண்டாட்டம் 12.06.2026

எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியின் சிறார்கள் சுற்றாடலில் இருந்தும் தங்களுடைய கைவண்ணங்களாலும் கற்றறியும் வகையிலான மஞ்சள் நாள் கொண்டாட்டம்12.06.2026 முன்பள்ளி ஆசிரியரின் வழிகாட்டலில் மழலைகளால் மேற்கொள்ளப்பட்டது.

UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் 19.05.2026 எமது சபைக்கு வருகை தந்திருந்திருந்த வேளை

UNDP நிறுவனத்தின் CDLG செயற்றிட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் எமது சபைக்கு வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலான முன்னேற்றங்கள் பற்றி நேரடியாக பார்வையிடுவதற்காகUNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் 19.05.2026 எமது சபைக்கு வருகை தந்திருந்தனர்

புதுவருட நிகழ்வு 06.05.2026

எமது சபையின் 2026ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வானது 06.05.2026 புதன் கிழமை வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்தில் எமது சபையின் கௌரவ தலைவர் தலைமையில் கௌரவ உறுப்பினர்கள்,செயலாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடனும் பங்குபற்றுதலுடனும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெண் சாதனையாளருக்கான கௌரவிப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை வழங்கும் நிகழ்வு -30.04.2026

2026ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமிருந்து பெண்சாதனையாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்2026ம் ஆண்டு சபையின் பாதீட்டில் 2024/2025 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்குதெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் பொருளாதார உதவி தேவைப்படும்13 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 5000.00 என்ற அடிப்படையில் 04 மாதங்களுக்கான கொடுப்பனவு தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரச அதிபர் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய உ.உ.ஆணையாளரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிகையலங்கார நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 26.04.2026

எமது சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிகையலங்கார நிலையங்களை நடத்துவோருக்கானகலந்துரையாடல் 26.04.2026ம் திகதி எமது சபையின் கௌரவ தலைவர் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டு ள் சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியநடைமுறைகள் பற்றிய தெளிவூட்டலை உரிமையாளர்களுக்கு வழங்கியிருந்தனர்    

உணவக உரிமையாளர்களுடனான கலந்துரையாடல்- 24.04.2026

எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களை நடத்துவோருக்கான கலந்துரையாடல் 24.04.2026ம் திகதி கௌரவ தலைவர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் எமது சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.உணவகங்களில் பொலித்தீன் பாவனையினை முற்றாக தடை செய்வதும் அதற்கான மாற்று வழிகளினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

உணவகங்களுக்கு பரிசோதனை நிமித்தம் அதிரடியாக விஜயம் -09.04.2026

உணவகங்களுக்கு பரிசோதனை நிமித்தம் அதிரடியாக விஜயம் -09.04.2026

 
எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்குகின்ற உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க 09.04.2026 எமது சபையின் கௌரவ தவிசாளர் தலைமையிலான சிரேஸ்ட பொது சகாதார பரிசோதகர் உட்பட பொது சகாதார பரிசோதகர்கள் குழுவினரால் பூவரசங்குளம்  பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற மு றையில்இயங்கி வந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” – “Blue day” 02.04.2026

மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
"நீல நிறத்தைச் சுட்டும் நாள்" Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.

ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026

              16.03.2026 அன்றைய தினம் நடைபெற்ற எமது ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026 பதிவுகள்

இப்தார் நிகழ்வு

இன்றைய தினம் எமது பிரதேச சபையில் கௌரவ தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
 நிகழ்வின் பதிவுகள் சில..

தாக சாந்தி நிகழ்வு – 12.03.2026

கிறிஸ்தவ மதத்தவர் தவக்காலத்தின் போது மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் கோமரசன்குளம் கல்வாரி புனிதத் தலம் நோக்கி ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்வதைப்போல, இவ்வருடமும் மன்னார் பிரதான வீதியினூடாக வருகைதந்த விசேட தினங்களில் ஒன்றாகிய 12.03.2026 வியாழக்கிழமையன்று பக்தர்களுக்காக எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களுடைய தலைமையில் கௌரவ உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பம்பைமடு பகுதியில் "தாகசாந்தி நிலையம்" அமைக்கப்பட்டு தாக சாந்தி நிகழ்வு நடைபெற்றது...
நிகழ்வின் பதிவுகள் சில

ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026 – அழைப்பிதழ்

                  அனைவரையும் மழலைகளின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் சந்தைக்கு வருக வருக என வரவேற்கின்றோம்

அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் சபையின் நோக்கினை அடைந்திட ஆளுமையுடன் மக்கள் சேவையாற்றும் வீர மங்கையர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 24.02.2026

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான ஆதனவரி நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை மதீனநகரில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நடமாடும் சேவையிலும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் போட்டி- 25.02.2026

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு 25.02.2026ம் திகதி கணேசபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் (மென்பந்து கிரிக்கெட்) போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்கள், சந்திகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்பாக பொதுவாக இரவு மற்றும் சனநடமாற்றமற்ற வேளைகளில் திண்மக் கழிவுகளை (குப்பைகளை) கொண்டுவந்து வீசிச்செல்வதனால் பாரிய சூழல் மாசடைவுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
Continue reading "சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை"

கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்...

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 19.02.2026 – 2ம் நாள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 2ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை அண்ணாநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இரு தினங்களாக நடைபெற்ற நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை - மகாறம்பைக்குளம் 18.02.2026 - 1ம் நாள்
முதன்முறையாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 1ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று புதன்கிழமை (18.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறுகின்றது.
மேலும் நாளைய தினமும் (19.02.2026) அண்ணாநகர் பகுதியிலும் 2ம் நாளாக ஆதனவரி நடமாடும் சேவையானது காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறும்.
குறித்த நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரி படிவங்களை ( K Form) பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஆதனவரியை இம்மாதம் (மாசி மாதம்) 28 ஆம் திகதிக்கு முன் செலுத்துபவர்கள் தமது வரியில் 05% இனை கழிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .
எனவே ஆதன வரி செலுத்தும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஆதனங்களுக்கான வரியினை இன்றைய தினம் நடைபெறவுள்ள நடமாடும்ட சேவையில் நிலுவையின்றி செலுத்தி தாங்களும் பயனடைவதுடன், தங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்..
தவிசாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில