
தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025


எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஈச்சங்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக வீதிகளில் நடமாடி மக்களுக்கு விபத்துக்கள் மூலம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற கால்நடைகளை பிடித்தடைத்து உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாடு எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் 16.11.2025 அன்று நடைபெற்றது.


முழு நாடுமே ஒன்றாக " போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பு சுகததாஸ உள்ளரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பான சம நேரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும்
Continue reading "போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு" 


வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை -தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா - 2025
Continue reading "வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை -தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா – 2025"
SDG Goal No 13 - வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல் Continue reading "அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு"







உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்,பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம்,ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பேயாடிகூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன 18.08.2023 பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.
இந்த வாகனசுத்திகரிப்பு நிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன உருவாக்கம் பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த எமது சபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ.துரைச்சாமி-நடராஜசிங்கம் அவர்களை இந்த நேரத்தில் நாம் நன்றிகளுடன் நினைவு கூருகின்றோம்.
அத்துடன் இந்த வாகன சுத்திகரிப்பு நிலைய செயற்றிட்டத்திற்கான நிதியீட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உறுதுணையாக நின்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற இணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சண்முகராஜா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
