
எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்கள், சந்திகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்பாக பொதுவாக இரவு மற்றும் சனநடமாற்றமற்ற வேளைகளில் திண்மக் கழிவுகளை (குப்பைகளை) கொண்டுவந்து வீசிச்செல்வதனால் பாரிய சூழல் மாசடைவுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் புதிய நடவடிக்கைகள் முன்டுக்கப்பட்டுள்ளன .
அந்தவகையில் முறையற்ற விதத்தில் கழிவுகள் வீசப்படுவதை அவதானிக்க எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 57 இடங்களில் சூரிய கலத்தில் இயங்குகின்ற கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நேற்றைய தினம் (26.02.2026) சபையின் தவிசாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்மூலம் சட்டவிரோதமாக வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, வீதி விபத்துகள் உட்பட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும் இதன் ஊடாக கண்காணிக்கப்படவுள்ளது.

