
பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026
ஓமந்தை முன்பள்ளி
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஓமந்தை முன்பள்ளியிலிருந்து தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழாவானது 2026.01.12ம் திகதி ஓமந்தை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திரு. பா. பாலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழாவிற்கு பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினரோடு இணைந்து கௌரவ விருந்தினர்களாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் , கௌரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் எமது சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு

