வரவு செலவுத்திட்டம் தொடர்பான வட்டார கலந்துரையாடல் – ஈச்சங்குளம் வட்டாரம் 25.08.2026

எமது சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கு வட்டார ரீதியாக தேவைப்பாடுகளை மக்களிடமிருந்து நேரடியாக கேட்டறியும் செயற்றிட்டம் இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஈச்சங்குளம் வட்டாரத்தின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான வட்டாரக்கலந்துரையாடல் 25.08.2026 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈச்சங்குளம் கிராம சேவையாளர் அலுவலகக்கட்டடத்தில் காலை 10.00 மணிக்கு கௌரவ தலைவர் தலைமையில் சபையின் செயலாளர்,கௌரவ வட்டார உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் வட்டார மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த கலந்தரையாடலில் ஈச்சங்குளம்     வட்டார மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் வட்டார அபிவிருத்தி தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *