
பொலித்தீனை மூலப்பொருளாகக்கொண்ட உணவு உறைகளின் (Lunch Sheet) உற்பத்தி மற்றும் பாவனையை வடமாகாணத்தில் தடை செய்தல் – 01.01.2026 (சுற்றறிக்கை)
07.10.2025ம் திகதி வடமாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில், முக்கியமாக கழிவகற்றல் முகாமைத்துவத்தின்கீழ் 2026.01.01ம் திகதி முதல் பொலித்தீனை மூலப்பொருளாகக்கொண்ட உணவு உறைகளின் (Lunch Sheet) பாவனையை வடமாகாணத்தில் தடைசெய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைக்குள் இயங்குகின்ற
சிற்றுண்டிச்சாலைகள்
உணவகங்கள்
ஹோட்டல்கள்
வெதுப்பகங்கள் போன்றவற்றில் உணவுப்பரிமாற்றங்களின் போதும் உணவுகளை பொதிசெய்யும் போதும் வாழையிலை போன்ற இலைகளை பயன்படுத்தல்.
உணவுகளை பொதிசெய்யும் போதும் காகித அட்டைப்பெட்டிகளை பயன்படுத்தல்
உணவு பரிமாற உண்ணப் பயன்படும் கோப்பைகளை சூடாக்கிகளை பயன்படுத்தி வெப்பமடையச்செய்து அவற்றை சுகாதாரமாக பயன்படுத்தல். – முதலான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்பவற்றை உள்ளடக்கிய 02/2025ம் இலக்க 2025.12.30ம் திகதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை எமது சபை ஆளுகைக்குட்பட்ட உணவு உற்பத்தி மற்றும் பரிமாற்றங்களோடு தொடர்புடைய வியாபார நிலையங்களில் பின்பற்றி பொலித்தீன் பாவனையால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளில் இருந்து எமது சமூகத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
தலைவர்,
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
சுற்றறிக்கை தங்களின் பார்வைக்கு
