எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது நிதி வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்காக இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் இலங்கை அரச நிதி கணக்கறிஞர்கள் சங்கத்தினால் BMICH இல் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்ட “Certificate of Compliance” விருதினை தனதாக்கிக்கொண்டது.

எமது சபைக்கு கிடைக்கப்பெற்ற இவ் விருதினை எமது சபை சார்பாக என்னுடன் இணைந்து செயலாளர் பெற்றுக்கொண்டார்.
இந்த விருது கிடைப்பதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்ட சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *