“நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும் (Good Health and Well-being) – அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்தல்” எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 03 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 4ம் நாள் நிகழ்வானது ”சுகாதாரமும் துப்பரவு தினம் மற்றும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக இலவச மருத்துவ முகாம் எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை எமது பிரதான அலுவலக வளாகத்தில்
நடைபெற்றது.
குறித்த இலவச மருத்துவ முகாமிற்கு Rotary club of Vavuniya Heritage மற்றும் Vavuniya Health Care Private Hospital ஆகியன இணை அணுசரணை வழங்கியிருந்தன.
இந்நிகழ்வை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர், Rotary Club of Vavuniya Heritage தலைவர் S. கிருஷ்ணகுமார், Rtn. சிவகௌரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் K. சாந்தகுமார் மற்றும் Vavuniya Health Care Private Hospital முகாமை இயக்குனர் Dr. N. Kantheepan ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவ் மருத்துவ முகாமில் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் தொழில்நுட்பக் கல்லுரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் பதிவுகள் சில…

“காலநிலைச் செயல்பாடு (Climate Action) – காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கங்களையும் எதிர்த்துப் போராடுதல்” எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 13 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 3ம் நாள் நிகழ்வானது ”சுற்றாடல், மரநடுகை தினம் மற்றும் சர்வதேச ஓசோன்படல பாதுகாப்பு தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக “மரநடுகை” ஆசிகுளம் வட்டாரத்துன் சிதம்பரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழனி முருகன் ஆலய வளாகத்தில் எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் புதன்கிழமை காலை 9.00 மணிக்கு
நடைபெற்றது.
குறித்த மரநடுகை நிகழ்விற்கு “மருதம் பசுமை இயக்கம்” இணை அணுசரணை வழங்கியிருந்தது.
இவ் நிகழ்வில் சபையின் கௌரவ உப தலைவர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தர்.
நிகழ்வின் பதிவுகள் சில

எமது சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை அப்புற்படுத்துகின்ற பம்பைடு கழிவுகள் சேகரிக்குமிடத்தினை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டமானது KOICA நிறுவனத்தினால் முன்னெடுக்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக 16.09.2026 புதன்கிழமை அன்று எமது சபையுடன் இணைந்து CAiT, CHGjL நிறுவனம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தினர் அடிப்படை ஆய்வு மற்றும் கழிவு கலவை ஆய்வு (baseline survey and waste composition survey) என்பவற்றை மேற்கொண்டனர்.
சமூகத்தின் அனைத்து மக்களும் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்துதல்” எனும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய “ சமத்துவமின்மையை குறைத்தல்” (Reduced Inequalities) எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 10 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 2ம் நாள் நிகழ்வானது ”பொதுப்பயன்பாட்டு தினம் மற்றும் சர்வதேச சனநாயக தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சிரமதான நடவடிக்கையாக எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு
A9 வீதி, மன்னார் வீதி மற்றும் மரக்காரம்பளை வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
குறித்த சிரமதான நடவடிக்கையில் சபையின் கௌரவ. உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், நெளுக்குளம் மற்றும் பூவரசன்குளம் பகுதிகளின் காவல் நிலையத்தினர், பம்பைமடு இராணுவம், பிரதேசங்களின் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், கலைவாணி சனசமூக நிலையத்தினர், சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்ட னர்.
மேலும் அன்றைய தினமே எமது சபை வாகனங்களைப் பயன்படுத்தி பொது மயானம் துப்பரவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது