“நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும் (Good Health and Well-being) – அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்தல்” எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 03 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 4ம் நாள் நிகழ்வானது ”சுகாதாரமும் துப்பரவு தினம் மற்றும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக இலவச மருத்துவ முகாம் எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை எமது பிரதான அலுவலக வளாகத்தில்
நடைபெற்றது.
குறித்த இலவச மருத்துவ முகாமிற்கு Rotary club of Vavuniya Heritage மற்றும் Vavuniya Health Care Private Hospital ஆகியன இணை அணுசரணை வழங்கியிருந்தன.
இந்நிகழ்வை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர், Rotary Club of Vavuniya Heritage தலைவர் S. கிருஷ்ணகுமார், Rtn. சிவகௌரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் K. சாந்தகுமார் மற்றும் Vavuniya Health Care Private Hospital முகாமை இயக்குனர் Dr. N. Kantheepan ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவ் மருத்துவ முகாமில் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் தொழில்நுட்பக் கல்லுரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் பதிவுகள் சில…

