“காலநிலைச் செயல்பாடு (Climate Action) – காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கங்களையும் எதிர்த்துப் போராடுதல்” எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 13 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 3ம் நாள் நிகழ்வானது ”சுற்றாடல், மரநடுகை தினம் மற்றும் சர்வதேச ஓசோன்படல பாதுகாப்பு தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக “மரநடுகை” ஆசிகுளம் வட்டாரத்துன் சிதம்பரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழனி முருகன் ஆலய வளாகத்தில் எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் புதன்கிழமை காலை 9.00 மணிக்கு
நடைபெற்றது.
குறித்த மரநடுகை நிகழ்விற்கு “மருதம் பசுமை இயக்கம்” இணை அணுசரணை வழங்கியிருந்தது.
இவ் நிகழ்வில் சபையின் கௌரவ உப தலைவர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தர்.
நிகழ்வின் பதிவுகள் சில

