வளமான நாடு – அழகான வாழ்வு  உள்ளூராட்சி வாரம் – 2026   ”புத்துயிர்க்கும் புதுநகரம்” – முதலாம்நாள் நிகழ்வுகள் 14.09.2026  

இலக்கு – 10 – சமத்துவமின்மையை குறைத்தல்” (Reduced Inequalities)

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சமூகத்தின் அனைத்து மக்களும் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்துதல்” முதலான முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய “ சமத்துவமின்மையை குறைத்தல்” (Reduced Inequalities) எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 10 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் முதலாம் நாள் நிகழ்வானது ”நடமாடும் சேவை மற்றும் வருமானமீட்டும் நாள்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக இன்று எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யங்கராவூர் விக்னேஸ்வர் ஆலயத்தில் ஆரம்பமானது.
ஆரம்ப விழாவினைத் தொடர்ந்து ஆதனவரி சேகரிப்பினை பிரதானமாக உள்ளடக்கிய நடமாடும் சேவை யங்கராவூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளில் நடைபெற்றது.
சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் சாளம்பைக்குள வட்டார மக்கள் பலர் பங்குபற்றி தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் பதிவுகள் சில…

 

 

”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *