சமூகத்தின் அனைத்து மக்களும் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்துதல்” எனும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய “ சமத்துவமின்மையை குறைத்தல்” (Reduced Inequalities) எனும் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு – 10 ற்கு அமைவாக ….
எமது பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் நிகழ்வுகளின் 2ம் நாள் நிகழ்வானது ”பொதுப்பயன்பாட்டு தினம் மற்றும் சர்வதேச சனநாயக தினம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சிரமதான நடவடிக்கையாக எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு
A9 வீதி, மன்னார் வீதி மற்றும் மரக்காரம்பளை வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
குறித்த சிரமதான நடவடிக்கையில் சபையின் கௌரவ. உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், நெளுக்குளம் மற்றும் பூவரசன்குளம் பகுதிகளின் காவல் நிலையத்தினர், பம்பைமடு இராணுவம், பிரதேசங்களின் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், கலைவாணி சனசமூக நிலையத்தினர், சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்ட னர்.
மேலும் அன்றைய தினமே எமது சபை வாகனங்களைப் பயன்படுத்தி பொது மயானம் துப்பரவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
நிகழ்வின் பதிவுகள் சில…


